இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

5 December 2012

30 November 2012

எங்களுடைய கரங்களுக்கு வலு சேர்த்த அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த நிதி உதவி தேவை என்பதை அறிந்த உடனே! இந்தியா மட்டுமில்லாது அனைத்து உலக நாடுகளிலிருந்தும் நன்கொடைகளை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் மற்றும் அதற்கு உதவி செய்து கொண்டிருக்கும் அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

" எழுத்தாளார் ஜெயமோகன் " அவர்கள் இந்த பகிர்வை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு எங்களுக்கு உதவியமைக்கு மிக்க நன்றி!


Photo: எங்களுடைய கரங்களுக்கு வலு சேர்த்த அனைத்து  பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த நிதி உதவி தேவை என்பதை அறிந்த உடனே! இந்தியா மட்டுமில்லாது அனைத்து உலக நாடுகளிலிருந்தும் நன்கொடைகளை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் மற்றும் அதற்கு உதவி செய்து கொண்டிருக்கும் அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

" எழுத்தாளார் ஜெயமோகன் " அவர்கள் இந்த பகிர்வை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு எங்களுக்கு உதவியமைக்கு மிக்க நன்றி!
மேலும் அவகர்ளுடைய வாசகர்களும் எங்களுக்கு அதிகப் படியான பங்களிப்பை நிதி மட்டுமில்லாது பல வழிகளிலும் தொடர்ந்து அளித்த வண்னம் உள்ளனர். 

மேலும்  பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களும் எங்களுடைய பசுமைப் பணிக்கு தொடர்ந்து பங்களிப்பை அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் பனை நிலம் தமிழ் சங்கம், போன்ற உலகமெங்கிலும் வாழும் தமிழர் அமைப்புகளும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் நம் இளைய தலைமுறையினர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் அவரவர் தொழில் நுட்ப அறிவையே நமக்கு அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் தொழில் அதிபர்களும் , அறிமுகமில்லாத நண்பர்களும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.

கட்டிட வேலைகளுக்கான செயல் திட்டங்கள் தயாரிக்கும் பணி விரைவில் முடிக்கப் பட உள்ளது.

உழவர் திருநாளிற்கு முன்னதாக பணிகளை செய்து முடிக்க மேலும் தன்னார்வர்கள் தேவை.

நம்முடைய ஆராய்சிப் பணிகளை அனைவரும் கற்று தங்கள் வாழ்வை " சுய சார்புள்ளதாக " உருவாக்கிக் கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் " வானகத்திற்கு " வரலாம்.

பங்களித்த அனைத்து பசுமை உள்ளங்களுக்கும்  மனமார்ந்த நன்றி!!!

அக்டோபர் மற்றும் நவம்பர் 12 ம் தேதி முடிய  நங்கொடை அளித்தவர்களின் பட்டியல் ( வங்கிக கணக்கின் பிரதி )மேலும் அவகர்ளுடைய வாசகர்களும் எங்களுக்கு அதிகப் படியான பங்களிப்பை நிதி மட்டுமில்லாது பல வழிகளிலும் தொடர்ந்து அளித்த வண்னம் உள்ளனர்.

மேலும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களும் எங்களுடைய பசுமைப் பணிக்கு தொடர்ந்து பங்களிப்பை அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் பனை நிலம் தமிழ் சங்கம், போன்ற உலகமெங்கிலும் வாழும் தமிழர் அமைப்புகளும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.
மேலும் நம் இளைய தலைமுறையினர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் அவரவர் தொழில் நுட்ப அறிவையே நமக்கு அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் தொழில் அதிபர்களும் , அறிமுகமில்லாத நண்பர்களும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.

கட்டிட வேலைகளுக்கான செயல் திட்டங்கள் தயாரிக்கும் பணி விரைவில் முடிக்கப் பட உள்ளது.

உழவர் திருநாளிற்கு முன்னதாக பணிகளை செய்து முடிக்க மேலும் தன்னார்வர்கள் தேவை.

நம்முடைய ஆராய்சிப் பணிகளை அனைவரும் கற்று தங்கள் வாழ்வை " சுய சார்புள்ளதாக " உருவாக்கிக் கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் " வானகத்திற்கு " வரலாம்.

பங்களித்த அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!!!

அக்டோபர் மற்றும் நவம்பர் 12 ம் தேதி முடிய நன்கொடை அளித்தவர்களின் பட்டியல் ( வங்கிக கணக்கின் பிரதி )

7 November 2012

உங்களுள் மாற்றம்! சமுதாயத்திலும் மாற்றம்! வேண்டுமா ?
மூன்று நாட்கள் சுயசார்பு வாழ்வியல் பயிற்சி
( 3days Leadership Training )



           கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் வருகிற நவம்பர் மாதம் 23.11.2012 முதல் 25.11.2012 ஆகிய மூன்று நாட்களில் சுயசார்பு வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்
சி, கலாச்சார மாற்றம், பராம்பரியத்தை மீட்க என்ன வழி ? & கலைந்துரையாடல் நடைபெறும்.
        செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும். இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் " அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.

ஏங்கல்ஸ் ராஜா இந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.

பயிற்சிக் கட்டணம் ரூபாய் 750/- மட்டும்.
தங்குமிடம், உணவு இலவசம்.


பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
( Vanagam IOB Account no )
G. Nammalvar A/C no :137101000011534
Bank Name : Indian Overseas Bank , Kadavoor
IFSC Code : IOBA0001371
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Contact : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in

பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311


முன்பதிவு அவசியம் . மேலும் விவரங்களுக்கு
தொலைபேசி எண் : 9443575431


இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.

மருந்தே இல்லாத உடல் நலம்
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.

19 October 2012


இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த நிதி உதவி தேவை......


 

நிதி உதவி தேவை......

சுயநலம் பாரது பொதுநலத்திற்காக தமது வாழ்நாள் முழுவதையுமே தியாகம் செய்த நமது " பசுமைப் பேராளியான " இயற்கை வேளாண் ஞானி " நம்மாழ்வார் " அவர்களால் உருவாக்கப்பட்ட " நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான வானகம் பண்ணை " இயற்கை வழி வேளாண்மை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சி பணிகளை பல வருடங்களாக சிறப்பாக செய்தும் , அதை நம் மக்களுக்காக எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் கற்பித்துக் கொடுத்துக் கொண்டும் வருகிறது.

இந்த சீரிய பணியின் பலனாய் தற்போது தமிழகம் மட்டுமில்லாது உலகமெங்கும் இயற்கை வழி வேளாண்மை சிறப்பாக நடைபெற்று உணவு சங்கிலி மீட்கப்பட்டு வருகிறது.

இதை நம்முடைய எதிர்கால தலைமுறையினருக்கும் கொண்டு சென்று, அவர்களும் பலனடைய வேண்டும் என்கிற நோக்கில் கடந்த 6-10-2012 அன்று வானகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நம்மாழ்வார் ஐயா தலைமையில் நடைபெற்றது. அதில் ஆராய்ச்சிப் பணிகளை மேலும் விரிவுபடுத்தத் தேவையான " மனிதவளம் பற்றியும், நிதி தேவைப்பற்றியும் பற்றிம், நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது. முடிவில் நம்மாழ்வார் ஐயா அவர்களும் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் " ஏங்கல்ஸ் ராஜா " அவர்களும் பொதுநலன் விரும்பிகளுக்கும், நம்மாழ்வார் ஐயாவால் பலன் அடைந்தவர்களுக்கும், பசுமை காவலர்களுக்கும், இளைஞர்களுக்கும் கேட்டுக் கொண்டதுயாதெனில்

1. தொடர் மின்வெட்டினால் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் வானகமே வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலை நீடித்தால் பண்ணை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

இதற்குத் தீர்வாக புதுபிக்கக் கூடிய இயற்கை எரிசக்தியான " சூரிய ஒளி மின்சார தகடுகள் 5HP அளவுகளில் குறைந்த விலையில் பொருத்தித்தர ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்கு செலவாகும் உத்தேச மதிப்பு ரூபாய். 5 இலட்சம்.


இதற்கு தேவையான நிதியை (உதரணத்திற்கு, 1000 பொதுநலன் விரும்பிகள் ரூ.500/- வீதம் நன்கொடையாக கொடுத்தால் இத்திட்டத்தை நிறைவு செய்துவிட முடியும்). இதன் மூலம் இன்னும் அதிகப் படியான நீர் நமக்கு கிடைக்கப் பெற்று வனத்தையே உருவாக்க முடியும்.


" மழைக்காலம் முடியும் ( இரு மாதத்தற்குள் ) முன்னர் செய்துமுடிக்க வேண்டும். இல்லையெனில் கோடை வரும் முன்னரே பெரும் தோய்வு நிலை ஏற்பட்டு விடும்."


2. வானகத்தில் பயிற்சி நடக்கும் இடம் ஒரு கீற்றுக்கொட்டகை என்பது அனைவருக்கும் தெரியும், தற்போது மழைக்காலம் என்பதால், அதிக மழைவந்தால் தாங்கக்கூடியதாக இக்கொட்டகை இல்லை. இதை மாற்றியமைக்கவும் , இங்கு நீண்டகால பயிற்சிக்கு வருபவர்களுக்கு முறையான இடவசதி தேவை.


3. மேலும் " நம்மாழ்வார் ஐயாவின் " அறிவுக் கூர்மைக்குக் காரணமான புத்தகங்கள் நமது வானகத்தில் உள்ளது. அதை அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளுவும், அதை பாதுகாக்கவும் நூலக வசதி தேவை?


4. வானகத்தில் இயற்கையின் மீது பற்றுள்ள பயிற்றுனர்களும் தேவைப்படுகின்றனர்.


எனவே 1000 துடிப்பான சமூக சிந்தனையுள்ள தன்னார்வமிக்க இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் வாழ்வியல் நெறிகளையும் கற்பித்து அவர்களையே பயிற்றுனர்களாக உருவாக்கும் பணியும் விரைவில் செய்தும் முடிக்க வேண்டும். ( 1000 தன்னார்வ இளைஞர்கள் தேவை. )


எனவே தங்களால் இயன்ற நிதியை மற்றும் பங்களிப்பை உடனடியாக அளித்து , வானகத்தின் வளர்ச்சியில் பங்கேற்று, இவ் ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த தொடந்து பணியாற்ற உதவுவோம்.


செய்தியை நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நன்றி!!
 
வானகம் வங்கி கணக்கு விவரங்கள்:

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
( Vanagam IOB Account no )
G. Nammalvar A/C no :137101000011534
Bank Name : Indian Overseas Bank , Kadavoor
IFSC Code : IOBA0001371
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Contact : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in

மேலும் விவரங்களுக்கு
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல், கரூர் மாவட்டம் - 621 311
தொலைபேசி எண்கள் : 94435 75431, 98444 45714, 94880 55546


Vanagam, Surumanpatti, Kadavur,
Tharagampatti Via,
Karur Dt.
Pin code 621311.
Cell : 94435 75431, 98444 45714, 94880 55546

http://vanagamvattam.blogspot.in/
http://www.vanagam.com/
http://www.facebook.com/pages/Nammalvar-Ecological-Foundation/
http://www.facebook.com/pages/Dr-G-Nammalvar-Organic-Agriculturist/

வாருங்கள் . நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இயற்கையை சிதைக்காமல் மீட்போம்.

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.
மருந்தே இல்லாத உடல் நலம்
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.

15 October 2012

மூன்று நாட்கள் இயற்கை வாழ்வியல் பயிற்சி

கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் வருகிற நவம்பர் மாதம் 2.11.2012 முதல் 4.11.2012 ஆகிய மூன்று நாட்களில் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும். செய்முறை

பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும். இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் " அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.

ஏங்கல்ஸ் ராஜா இந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.

பயிற்சிக் கட்டணம் ரூபாய் 750/- மட்டும்.
தங்குமிடம், உணவு இலவசம்.


பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311

முன்பதிவு அவசியம் . மேலும் விவரங்களுக்கு
தொலைபேசி எண் : 9443575431


இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.

மருந்தே இல்லாத உடல் நலம்
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.

6 September 2012

விரிவான சுயசார்பு வாழ்க்கை பயிற்சி


" இயற்கை வாழ்வியலின் தந்தை மகாத்மா காந்தியின் " பிறந்த நாளை முன்னிட்டு " காந்தியக் கொள்கையான சுயசார்பு இந்தியாவை" உருவாக்கும் முயற்சியில்


" இயற்கை வேளாண் ஞானியுடன்"  வானகத்தில் 15 நாள் சிறப்பு விரிவான " சுயசார்பு வாழ்க்கை பயிற்சி "

கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் நமது பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் வருகிற செப்டம்பர் மாதம் 24.9.2012 முதல் 8.10.2012 ஆகிய 15 நாட்களில் சிறப்பு விரிவான இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை,தேனீ வளர்ப்பு பயிற்சி, மண் புழு உரம் தாயரிப்பு, பஞ்சக்காவியா முதல் பூச்சி விரட்டி வரை, பஞ்சக்காவியாவின் மருத்துவப் பயன்கள், மழை நீர் சேகரிப்பு ,  இயற்கை உணவு தயாரிப்பு, மதிப்பு கூட்டி சந்தைப் படுத்துதல்,  மாடி வீட்டுத்தோட்டம், மரம் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பரமரிப்பு மற்றும் மருத்துவம்,  மருந்து இல்லாத மருத்துவம் குறித்த விரிவான பயிற்சிகள், யோகா பயிற்சி மேலும் பலதரப் பட்ட பயிற்சிகளும் & கலைந்துரையாடல்களும் நடைபெறும். செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல்
மூலம் விரிவான களப்பயிற்சி நடைபெறும்.

இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் " அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.

ஏங்கல்ஸ் ராஜா இந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார். இதில் சிறப்பு ஆராய்சியாளர்களும் பயிற்சி அளிக்கிறார். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சிக் கட்டணம் ரூபாய் 3,750/- மட்டும். இயற்கையான தங்கும் சூழலில் கட்டணமில்லா இயற்கை உணவுகளும் வழங்கப்படும்.

முன்பதிவு அவசியம் . மேலும் விவரங்களுக்கு  
தொலைபேசி எண் : 94880 55546
பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்

வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல், கரூர் மாவட்டம் - 621 311

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.
மருந்தே இல்லாத உடல் நலம்
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.

31 August 2012

 
                       
கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண்   பண்ணையில் வருகிற செப்டம்பர் மாதம் 14.9.2012  மற்றும்  16.9.2012  ஆகிய   மூன்று நாட்களில்   இயற்கை வாழ்வியல் பயிற்சி  நடைபெறுகிறது.  
                            இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும்.   செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும். இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் "  அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.


ஏங்கல்ஸ் ராஜா ந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.
             
 பயிற்சிக் கட்டணம் ரூபாய் 750/- மட்டும்.
    பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
   M. செந்தில் கணேசன்
  வானகம் (
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
   சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல், கரூர் மாவட்டம் - 621 311

தங்குமிடம், உணவு   இலவசம்.
முன்பதிவு  அவசியம் . மேலும் விவரங்களுக்கு
   தொலைபேசி எண் : 9488055546
 

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.

மருந்தே இல்லாத உடல் நலம் 
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.


19 August 2012

குறுந்தகடு தொடர்புக்கு : 

" இயற்கை வேளாண் ஞானி நம்மாழ்வார் " அவர்களின் சொந்தக் குரலில் இயற்கை வழி வேளாண்மை சார்ந்த அனைத்து குறுந்தகடுகளும் தற்போது நமது "வானகத்தில்" கிடைக்கும்.

( குறிப்பு : இந்த குறுந்தகடு நன்கொடை மூலம் கிடைக்கும் தொகையானது சமுதாயத்தின் எதிர்கால நலன் கருதி வானகத்தின் இயற்கை வழி வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்கும், நூலகம் அமைக்கவும் செலவிடப்படும். )
தபால் அல்லது கூரியர் கட்டணம் சேர்த்து அனுப்ப வேண்டுகிறோம்.


குறுந்தகடு தொடர்புக்கு :
M. செந்தில் கணேசன் Cell : 9488055546
வானகம், சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம் - 621311.


பகுதி - 1
ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை ?
1. இதில் ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை ? மற்றும்
2. உழவில்லாத வேளாண்மை (மசானபு ஃபுகோகா அவர்களின் ஒற்றை வைக்கோல் புரட்சி மற்றும் வாழ்கையில் கற்றுணர்ந்த பாடங்களை ) குறும்படம் மூலம் "நம்மாழ்வார் " அவர்களின் சொந்தக் குரலில் விளக்கும் குறுந்தகடு.
சிடியின் நன்கொடை : ரூ. 100/-

பகுதி - 2
1. இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பூச்சிக்கொல்லியான " எண்டோசல்பான் " பயன்பாட்டால் சீரழிக்கப்பட்ட வளமான கேரளாவின் காசர்கோட்டில் நிகழ்ந்த கொடுர பாதிப்பை குறும்படம் மூலமும்,
2. விதையிலே நஞ்சைக் கலந்து கடும் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் " மரபணு மாற்ற பயிர்களின் " பாதிப்புகள் மற்றும் சூழ்ச்சிகளை "நம்மாழ்வார் " அவர்களின் சொந்தக் குரலில் விளக்கும் குறுந்தகடு.
சிடியின் நன்கொடை : ரூ. 50/-

பகுதி - 3
1.உலக அளவில் ஏற்பட்டுள்ள நோய் மற்றும் சத்துக்குறைபாட்டிற்கான தீர்வுகளான சிறுதானியங்களின் பயன்பாடுகளை விளக்கும் குறும்படம் மற்றும்
2. நிரந்த வேளாண்மையின் தந்தை பில்முல்சன் அவர்களின் வட்டப்பாத்தி முறைபற்றி செய்முறை மூலம் விளக்கும் குறுந்தகடு.
சிடியின் நன்கொடை : ரூ. 100/-

பகுதி - 4
1." நம்மாழ்வார் "அவர்களின் சுவரில்லாத பள்ளிக்கூடமான "வானகத்தின்" மூலம் கற்று உருவான முன்மாதிரி பண்ணைகள்.
சிடியின் நன்கொடை : ரூ. 100/-

பகுதி - 5
தொகுதி - 1 மற்றும் தொகுதி - 2
இயற்கை வாழ்வியல் என்றால் என்ன?
1.இயற்கை மற்றும் இயற்கை வழி விவசாயம் பற்றியும், " நம்மாழ்வார் "அவர்களின் வாழ்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் குறுந்தகடு
இரண்டு சிடியின் நன்கொடை : ரூ. 200/-

பகுதி - 6
இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பது எப்படி?
1. இயற்கை வழி விவசாயம் செய்யத் தேவையான இயற்கை உரங்களான (அமிர்தகரைசல், மீன் அமிலம், பழக்கரைசல்) மற்றும் பூச்சி விரட்டிகள், தயாரிப்பது மற்றும் உபயோகிப்பது பற்றிய செய்முறைகளை விளக்கும் குறுந்தகடு
இரண்டு சிடியின் நன்கொடை : ரூ. 100/-

இயற்கை ஞானி திரு.நம்மாழ்வார் நேர்காணல்

நன்றி : சிறகு சிறப்பு நிருபர்

நாம் நேர்காணல் செய்யவிருப்பவர் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் முன்னணியில் இருப்பவர். ஆம் திரு.நம்மாழ்வார் அவர்கள். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். கோவில்பட்டி மண்டல மழைப் பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியாற்றினார். பசுமைப் புரட்சி,  நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்து வருபவர். “தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்‘ ‘வானகம்” போன்ற அமைப்புகளைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றுக்கும் கால்நடையாக சென்று அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருபவர். இனி திரு. நம்மாழ்வார் அவர்களின் நேர்காணல்:-

சிறகு: தங்களது தமிழின வாழ்வியல் பல்கலைக் கழகம், வானகம் போன்ற அமைப்புகளின் தேவை, அவசியம் என்ன?
திரு.நம்மாழ்வார்: இயற்கை வேளாண்மை என்பது வாயால் சொல்லி மற்றவர்கள் புரிந்து கொள்வது கிடையாது. ஆங்காங்கே மாதிரிகளை உருவாக்க வேண்டும். அந்த மாதிரிகளை உருவாக்கும்போதே பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யார் இந்தக் கல்வியுடன் இணைந்து போய்க் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் செல்லும் இடமெல்லாம் இந்தத் தகவலை கொண்டு செல்ல வேண்டும்.  அதனால் ‘ அறிவினை விரிவு செய், அகண்டமாக்கு மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்று பாரதிதாசன் சொன்னார். அந்த அறிவை விரிவு செய்வதற்காக இவற்றை உருவாக்குகிறோம். இயற்கை வலியது. மிகப் பெரியது. தன் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகளை அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். ஆனால் புதிப்பிக்க முடியாத கட்டத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் டன் நஞ்சை இந்திய மண்ணில் தூவி வருகிறார்கள். எனவே இதிலிருந்தெல்லாம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். இயற்கையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் மாதிரி நிலங்கள், புலங்கள் வேண்டும். அவைகளுக்காகத்தான் இவற்றை உருவாக்கினோம். நிலம், புலம் மட்டும் இல்லை மாதிரி சமூகமும் வேண்டும். இரண்டையும் இணைத்துத்தான் வானகம் என்று பெயர் வைத்திருக்கிறோம். தமிழின வாழ்வியல் பல்கலைக் கழகத்தை உருவாக்கினோம். இது இடையில் நிர்வாகிகள் குழப்பங்களால் நின்று போய்விட்டது. அதன் இறுதி வடிவமாகத்தான் வானகத்தைப் பார்க்கிறேன்.
சிறகு: இயற்கை வேளாண்மைக்கு வர விவசாயிகளுக்கு சில மனத் தடைகள் உள்ளன. குறிப்பாக நாம் மட்டும் இயற்கை வேளாண்மைக்கு மாறிவிட்டால் பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்ற முடியுமா? இரசாயன பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும் மற்றவர்கள் பயிர்களில் இருந்து நமது பயிருக்குப் பரவி விடாதா என்பது போன்ற குழப்பங்கள் உள்ளன. உங்களிடம் வரும் விவசாயிகள் எவ்வாறு நம்பிக்கை பெறுகிறார்கள்?
திரு.நம்மாழ்வார்: எப்போது வானகத்திற்கு வருகிறார்களோ அப்போதே நம்பிக்கை வந்துவிடும். ஏனென்றால் கண்ணுக்கு முன் பார்க்கிறார்கள். அதற்குள் எந்த இரசாயனமும் தெளிக்கவில்லை. ஆடு, மாடு தின்னாத செடி கொடிகளை துண்டு துண்டாக நசுக்கி மாட்டு மூத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். பத்து நாள் ஆனால் பிறகு பூச்சு விரட்டு தயார். தெளித்து விட்டோம் என்றால் சின்ன சின்ன பூச்சிகள் நம் செடியில் வந்து முட்டை போடும். சின்ன சின்ன தகவல்கள்கூட நம் விவசாயிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூச்சிக்கு நான்கு பருவம் உண்டு. முட்டை, புழு, கூட்டுப் புழு, பூச்சி. தாய் பூச்சி மென்மையான இலைகளில் உட்கார்ந்து முட்டை போடுகிறது. ஏனென்றால் முட்டையில் இருந்து வரும் புழு மென்மையான இலைகளைத்தான் தின்ன முடியும். ஆகவே இலை மீது பூச்சு விரட்டியை தெளித்து விட்டால் வாசனைக்கு வேறுவிதமான பூச்சிகள் வந்து உட்காரும். இது முதல். இரண்டாவது, ஒரு செடியில் பத்து பூச்சி இருக்கின்றன என்றால் அந்தப் பூச்சிகளை தின்ன இருபது பூச்சிகள் இருக்கின்றன. நாம் விஷம் தெளிக்கும் நேரத்தில் இந்த இருபது பூச்சிகள்தான் முதலில் சாகும். மறுபடியும் அந்தப் பூச்சிகள் வரும்போது அதைத் தின்பதற்கு வேறு பூச்சிகள் இல்லை. இருநூறு வகை பறவைகள் பூச்சிகள் தின்னும். நீங்கள் எப்போது நஞ்சு தெளித்தீர்களோ பறவைகள் தோட்டத்துக்கு வருவது நின்று விடுகின்றது. இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. அதற்காகத்தான் வானகத்தை தொடங்கினோம். ஆனால் வானகத்திற்கு வராமல் எங்கேயோ இருந்துகொண்டு பொய்யையே கட்டி அழுது கொண்டிருக்கிறார்கள்.
சிறகு: பல ஆண்டுகளாக இயற்கை வேளாண்மை குறித்து பேசி வருகிறீர்கள். உங்கள் பணிக்கு வரவேற்பு எப்படி உள்ளது? வருத்தம் அளிப்பதாக இருக்கிறதா? மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறதா?
திரு.நம்மாழ்வார்: ஆரம்பக் கட்டத்தில் இந்தக் கிழவன் ஏதோ புலம்புகிறான் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு அடுத்த கட்டம் வந்தது. ஆங்காங்கே விவசாயிகள் செய்ய ஆரம்பித்தார்கள். ஜப்பானில், ஆஸ்திரேலியாவில் செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. கரூரில், வையம்பட்டியில், கடவூர் ஆகிய ஊர்களில் விவசாயிகள் பூச்சி விரட்டியை வாங்கிக் கொண்டு போய் தெளித்து வருகிறார்கள். இன்றைக்கு அறிவு பெற்ற சமுதாயம் தகவல் தொழில் நுட்பத்தில் வேலைக்குப் போனவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் எல்லோரும் வருகிறார்கள். ஏனென்றால் உணவில் நிறைய நஞ்சு கலப்பதால் எங்கு பார்த்தாலும் நோயாளிகள் இருக்கிறார்கள். பிறக்கும் குழைந்தைக்கும் புற்று நோய் இருக்கிறது. இந்த அநீதி தொடரக்கூடாது என்பதற்காக நிறைய பேர் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். கற்றுக் கொண்டு போய் இருக்கிறார்கள். இது மகிழ்ச்சிக்குரியது.
சிறகு: மாணவர்களிடம் பேசுகிறீர்கள். அவர்களிடம் எத்தகைய வரவேற்பு உள்ளது? அடுத்த தலைமுறையினர் இதில் ஆர்வம் காட்டுவார்கள், பெரிய மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
திரு.நம்மாழ்வார்: ஆரம்பத்தில் மாணவர்களை தவிர்த்து வந்தேன். என்னுடைய இலக்கு விவசாயிகள்தான் என்பதால் தவிர்த்தேன். பின்னர் பார்த்தேன், விவசாயிகளுக்கு ஒரு பயம் இருக்கிறது. இப்போது வந்துகொண்டிருக்கும் விளைச்சலும் வராமல் போய்விடுமோ என்று. அதனால் மாணவர்கள் மத்தியில் இதை விதைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு துறைக்குப் போனாலும் தன்னுடைய பங்கை ஆற்றுவார்கள். இளமையில் கல் என்று சொன்னார்கள். இளமையில் விதைக்கப்படும் விதை அது நீண்ட காலத்திற்கு வேலை செய்யும். அதனால்தான் மாணவர்கள் மத்தியில் எங்கு பேச அழைத்தாலும் போகிறேன். வரவேற்பு நன்றாக இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் இதில் பாதுகாக்கப்படுகிறது.
சிறகு: நூறு நாள் வேலைத் திட்டத்தில் – ஆந்திராவில் ஒரு மாவட்ட நிர்வாக அதிகாரி தன்னுடைய தனிப்பட்ட அக்கறையின் காரணமாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் மழை நீரை தேக்கி வைக்க குட்டைகள் வெட்டிக் கொள்ளலாம் என்று அனுமதித்ததாக நீங்கள் ஒரு முறை கூறினீர்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தைப் பறிக்கும் அரசு, மக்களுக்கு நிலத்தோடு இருக்கும் உறவை அறுத்தெறிகிறது. உங்கள் பார்வையில் நூறு நாள் வேலைத் திட்டம் எப்படி?
திரு.நம்மாழ்வார்: நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை எதுவும் நடக்கவில்லை. இதை நான் சொல்வதில்லை. நாடாளுமன்றத்தில் 543 பேர் இருக்கிறார்கள். அவர்களும் உட்கார்ந்து உட்கார்ந்துதான் எந்திறிக்கிறார்கள். அவர்கள் மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் மட்டும் உட்கார்ந்து எழுந்தால் என்ன தவறு? ஒரு நாளைக்கு நூறு ரூபாய்தானே கொடுக்கப் போகிறார்கள்? முப்பது நாளுக்கு மூன்றாயிரம்தானே. இதை வைத்து வருடத்திற்கும் சாப்பிட வேண்டும். இந்தத் திட்டத்தால் நல்லது நடக்கவில்லை. எங்கு தவறு நடக்கிறது என்றால் அரசியல் தளத்தில் இருக்கிறது. பெரிய வணிக அமைப்புகள் அரசுக்கு யோசனை வழங்குகிறது. என்னவென்றால், அமெரிக்காவில் ஒன்னரை விழுக்காடு மக்கள்தான் கிராமத்தில் வாழ்கிறார்கள். இங்கு அறுபது விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள். அமெரிக்கா போல் முன்னேற வேண்டுமானால் இங்கு அறுபது விழுக்காடு மக்கள் இருக்கக் கூடாது. முப்பது விழுக்காடு மக்களை குறைக்க வேண்டும் என்று சேம்பர் ஆப் காமர்ஸ் அரசுக்கு பரிந்துரை செய்து விட்டார்கள். அதை அடிப்படையாக வைத்துதான் அரசு திட்டம் போட்டு –உழவு சார்ந்தவர்களை உழவு உற்பத்திக்கே போகாதபடி பிய்த்து வெளியில் எடுக்கிறார்கள். இதனால் வேளாண் தொழில் தெரிந்த ஆட்கள் கிராமத்தில் இருக்க மாட்டார்கள். இப்போது அதுதான் நடக்கிறது. விவசாயி என்ன செய்கிறான்- நிலத்தை விற்று பணத்தை வங்கியில் போட்டு விட்டு  எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இளைஞர்களை படிப்பு என்று சொல்லி வெளியில் இழுத்து விட்டார்கள். வேலை என்று கூறி திருப்பூருக்கோ சென்னைக்கோ இழுத்துவிட்டார்கள். பல பகுதிகளை பட்டணமாக்கி கிராமங்களை விழுங்கி கிராமத்தில் இருக்கும் மனிதன், மண், தண்ணீர் எல்லாவற்றையும் நாசம் செய்து விட்டார்கள். கிராமங்களை பட்டணங்களின் சாக்கடை ஆக்கிவிட்டார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் நூறு நாள் வேலைத் திட்டத்தை நான் பார்க்கிறேன். அந்தத் திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் வைத்திருப்பது பெரிய கேலிக் கூத்து. மகாத்மா காந்தி, ‘பெருவித தொழில் உற்பத்தி தேவை இல்லை. பெருவாரியான மக்களால் உற்பத்தி நடக்க வேண்டும்’ என்று சொன்னார். அவர் பெயரிலேயே தொழில் தெரியாமல் மக்களை மாற்றும் போக்கு பெரிய நகைப்பிற்குரியது.
சிறகு: இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக ஒரு கொள்கை முடிவை அரசை எடுக்க வைக்க ஏதேனும் திட்டம் உள்ளதா? இதற்கு என்னவிதமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்?
திரு.நம்மாழ்வார்: இதற்குப் போராட்டமே தேவை இல்லை. தமிழ்நாட்டைப் பொருத்து சொல்கிறேன். ஆயிரம் பேருக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். 1000 நம்மாழ்வார்களை உருவாக்க வேண்டும். நூறு இடங்களில் பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். அந்தந்த வட்டாரத்தில் அமைக்க வேண்டும். பெண்கள் வெகுதூரம் போவதில்லை. அவர்களுக்கு அருகிலேயே சென்று கற்றுக் கொண்டு திரும்பும் வகையில் பயிற்சி மையங்கள் உருவாக்க வேண்டும். இதை உருவாக்கினால் பொய்யை அவர்கள் புரிந்து கொள்வார்கள். ‘பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு’ என்று பாரதி சொன்னான். அதுதான் இங்கு நடைபெறுகிறது. எனவே பொய்யைத் தொழுவதை விட்டு விட்டு உண்மையை தேடி வாருங்கள் என்று சொன்னால் மக்கள் மாறுவார்கள். மக்கள் மாறினால் அரசாங்கம் மாறியே தீர வேண்டும். மக்களை மாற்றாமல் அரசை மாற்ற நினைத்து செய்யும் செயல்கள் ஒன்றும் பயன்படாது.
சிறகு: வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட விரும்புகிறார்கள். அவ்வாறு விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு உங்கள் ஆலோசனை என்ன?
திரு.நம்மாழ்வார்: அமெரிக்கா போன நிறைய பேர் திரும்பி விட்டார்கள். அங்கு வாழ்க்கை இல்லை. நாங்கள் வாழவேண்டும் என்று நினைக்கிறோம். வெறும் சம்பாத்தியம் மட்டுமே வாழ்க்கை இல்லை. எங்கள் கையில் கொஞ்சம் பணம் இருக்கிறது. நிலம் கொஞ்சம் மலிவாகக் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இதில் நாம் ஆய்வு நடத்த வேண்டும். இப்போது தீவிரமான சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அறுபது சதம் மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். அதனால் கிராமத்தை வாழத் தகுந்ததாக மாற்ற வேண்டும். இப்போது பருவ மழை இல்லை, ஆனால் வெள்ளம் வருகிறது. வெள்ளம் வரும்போது கடலில் எப்படி அதை வடிப்பது என்று சிந்திக்கிறார்களே தவிர தண்ணீரை தேக்குவதைப் பற்றி யோசிக்கவில்லை. அரசர்கள் தன் பிறந்த நாளுக்கு ஏரி வெட்டினார்கள், வென்ற நாளுக்கு ஏரி வெட்டினார்கள். இராமநாதபுரத்தில் நாரை பறக்காத நாற்பத்தி மூன்று கண்மாய் ஏரி இருக்கிறது. அதை ராஜசிம்மன் என்ற மன்னன் வெட்டி இருக்கிறான். அது இப்போது வண்டல் படிந்து மேடாக தண்ணீர் இல்லாத இடமாக இருக்கிறது. பொதுப்பணித் துறை அதை ஆழப்படுத்தும் வேலையை செய்யவில்லை. மாடுகள் இன்று கசாப்பு கடைகளுக்கு போகிறது. மாடுகளை படுக்க வைத்து எழுப்பினால் அங்கு எந்த பயிரும் விளையும். கிராமத்தை அறிவுமிக்கதாகவும் வளம் மிக்கதாகவும் மாற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பண்ணை சேவை மையம் இருக்கவேண்டும். அதில் விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள் இருக்க வேண்டும். கிராமப் பள்ளிகளை வசதி இல்லாமல் ஆக்கிவிட்டு பட்டணத்திற்கு அனுப்புகிறார்கள். உன் கிராமம் உருப்படாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை வலுவாக்கி பள்ளியைச் சுற்றி மரங்கள் வளர்த்து பள்ளிக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் வேலையில் இறங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும். வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்கவேண்டும், பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும், ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும், குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும், ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்., அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும், ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும். இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். அரசு சலுகை வழங்குவது மக்களுக்கு சென்று சேர்வதில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒரு தகவல் மையம் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் அங்கு போய் உங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று சொல்ல வேண்டும். ஒரு குளம் கட்டிவிட்டு சுற்றி யாரும் காலை வைத்து இறங்காமல் பார்த்துக் கொண்டால் குடி நீர் பஞ்சத்தை ஒழித்து விடலாம். ஏரிக்கரைகளில் மரங்களை நடவேண்டும். அது ஆடு மாடுகளுக்கு தீவனம் ஆகும். அதில் குதிரை சவாரி செய்யலாம், குளத்தில் மீன் வளர்க்கலாம், படகு விடலாம். பட்டணத்தில் இருப்பவன் கிராமத்துக்கு வருவான். அப்படி கிராமங்களை உருவாக்குவது பற்றி நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன். நண்பர்களிடம் ஒப்புதலும் வந்துவிட்டது. இதற்கு ஆயிரம் தொண்டர்கள் தேவை. எந்த இடத்தில் வேலை துவங்கினாலும் மண்வெட்டி கூடையுடன் வரத் தயாராக இருக்கவேண்டும். இதுபோன்ற ஆட்களை தேடி வருகிறேன். இதில் வெளிநாட்டு நண்பர்களும் வந்து இணைவார்கள் என்று நம்புகிறேன்.
சிறகு: விதைகளே பேராயுதம் என்கிறீர்கள். நாம் இழந்த பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்க முடியுமா?
திரு.நம்மாழ்வார்: வெள்ளைக்காரன் நம் நாட்டை விட்டுப் போகும்போது இந்தியாவில் இருந்த நெல் ரகங்கள் முப்பது ஆயிரம். எல்லா ஆவணங்களும் இதை பதிவு செய்திருக்கிறது. கேரளத்தினர் இருநூறு வகை பாரம்பரிய நெல் விதைகளை கண்டுபிடித்து எடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் அறுபத்து மூன்று நெல் விதைகளை கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்னும் கண்டுபிடித்து சேர்த்தால் நூறு ஆகும். நூறு என்பதே பெரிய வெற்றிதான். பாரம்பரிய நெல்லின் சிறப்பு என்னவென்றால் பூச்சி, நோய் தாக்குவதில்லை, ரசாயன உரம் வேண்டியதில்லை. வங்கியில் கடன் வாங்க வேண்டியதில்லை, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்யவேண்டியதில்லை என்று நிறைய சாதகங்கள் உள்ளன. எனவேதான் விதையை பேராயுதமாக பயன்படுத்த வேண்டும் என்றோம். காய்கறி விதைகளில் போதிய அளவு நாம் வேலைகள் செய்யவில்லை. நண்பர்களிடம்- அடுத்த தை மாதத்திற்குள் எங்கு பார்த்தாலும் உழவர்களின் காய்கறி விதைகள் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். நடக்கும் என்று நம்புகிறேன்.

சிறகு: வானகத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புபவர்கள் தங்களை இணைத்துக் கொள்வது எப்படி?
திரு.நம்மாழ்வார்: வானகம் ஒரு அறக்கட்டளை. வானகத்தைத் தாண்டி ஒரு வளையம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆலோசனை வளையம் போல் வரும். இதில் எல்லோரும் இணையலாம்.

சிறகு: உங்கள் முயற்சிக்கு வாழத்துக்கள் ஐயா. உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதைக் கேட்டு பயனடைவார்கள் என்று நம்புகிறோம்.
திரு.நம்மாழ்வார்: ஒரு தகவல் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு நினைவு இருக்கிறது. இந்த பூமியில் எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அவர்கள் பெயரைப் போட்டு ஒரு மரம் வளர்க்க வேண்டும். இதனால் அவர்கள் வானகத்தில் என்னுடைய பங்கு இருக்கிறது என்று நினைக்கலாம். மனதாலோ உடலாலோ நோய் பட்டால் இங்கு வரலாம் தங்கலாம். இதுபோன்ற ஒரு சாந்தி வனத்தை உருவாக்கும் எண்ணம் என்னுள் இருக்கிறது.

சிறகு சிறப்பு நிருபர்


11 August 2012



ஒவ்வொரு விவசாயியும் (மனிதன்) தனக்குத் தேவையான எல்லா உணவையும் தானே உற்பத்தி செய்து தன்னை முதலில் காத்துப் பின்பு சமூகத்தை காத்துக் கொள்ள வேண்டும்.

இதே கொள்கையை அரசும் பின்பற்ற வேண்டும். தன் நாட்டுக்குத் தேவையான பொருளை தன் நாட்டிலே உற்பத்தி செய்து தன் மக்களுக்கு கொடுத்தது போக மீதியை ஏற்றுமதி செய்ய வேண்டும்.

பெட்ரோல் (அறிவு) உட்பட எந்த பொருளையும் அன்னிய நாட்டிடம் எதிர்பார்க்காமல் சுயமாக நம் நாட்டிலே கிடைக்கும் இயற்கை வளங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து கொள்ளும் " சுய சார்பு கொள்கைகளை " பின்பற்ற வேண்டும்.

அது மட்டுமே மட்டுமே நிலைத்து நீடித்த வளர்ச்சியுடையது.

2 August 2012

வானகத்தில் இயற்கை வாழ்வியல் பயிற்சி



நாள் :
15.8.2012 முதல் 18.8.2012 வரை மூன்று நாட்கள்

தங்குமிடம் உணவு சேர்த்து
பயிற்சி க்ட்டணம் ரூபாய் 750 மட்டும்


முன்பதிவு செய்ய :
M. செந்தில் கணேசன் Cell : 9488055546

28 July 2012

உணவில் விஷம் வைக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்ச முடிவு- !
----------------------------------
மத்திய அரசு போன புதனன்று உச்ச நீதி மன்றத்தில் பதிவு செய்த அபிடவிட்டில் என்டோசல்பான் விஷத்தை கேரளா, கர்நாடகாவில் மட்டும் தடை செய்து மற்ற மாநிலங்களில் தயாரிக்கவும் உபயோகபடுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது..!
 

கர்நாடகா கேரளா மட்டும் சுத்தமா இருக்கணும்;மத்தவன்லாம் விஷ உணவு உண்ண வேண்டுமா..?? அப்போ மத்தவங்க எல்லாம் சாகலாமா..! எந்த ஊர் நியாயம்..!

இதை இங்கு தேக்கிவைக்கவோ அல்லது முழுவதும் ஏற்றுமதி செய்வதோ முடியாது அதனால் மற்ற மாநிலத்தில் உபயோக படுத்த வேண்டும்..!இத சொல்ல தான் உங்களுக்கு ஒட்டு போட்டு போட்டோமா?

நம்மாழ்வார் முதற்கொண்டு அமீர்கான் வரை கதறியும் மத்திய அரசின் காதுகளில் விழாதது, அவர்கள் எந்த அளவு மக்களிடம் இருந்து விலகியும் பெருமுதலாளிகளின் விசுவாசியாகவும் உள்ளதை காட்டும்.

எல்லா நாடுகளும் இந்த விஷத்தை ஒழிக்க நினைக்கும் போது, காங்கிரஸ் அரசு மட்டும் நடைமுறைபடுத்த முயற்சிப்பது நியாயமா..??? அதுவும் ஒருதலைபட்சமாக..! சுத்தமான அயோக்கியத்தனம்/மக்கள் விரோத போக்கு அல்லவா..??

http://newindianexpress.com/cities/thiruvananthapuram/article576123.ece

http://www.thehindu.com/news/national/article3688642.ece

http://cseindia.org/node/4393

18 July 2012

   

 டாக்டர் கோ. நம்மாழ்வார் எழுதிய,  

“ நோயினைக் கொண்டாடுவோம் ”

இயல்வாகை பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்...

2012 ஜூலை 22 காலை 10 மணிக்கு,
ஆண்டாள் திருமண மண்டபம், கோவை.


நிகழ்வில்........

கவிதா குல்கர்னி - பாரம்பரிய விதைகளை மீட்டுருவாக்கம் செய்து மக்கள் மனதில் பரவலாக விதைத்தவர், மரபு மாற்று விதைகளுக்கு எதிராக தீவிரமாக இயங்கிவரும் சூழலியலாளர்.

தணல் ஸ்ரீ தர் - கேரளாவில் எண்டோசல்பான் எனும் எமனை ஒழிப்பதில் தீவிரமாக போராடி வெற்றி கண்டவர்.

பூச்சியல் அறிஞர் செல்வம் - நன்மை செய்யும் பூச்சிகள் அடையாளம் காட்டியவர்.

மாதேஸ்வரன் - தமிழ் பாரம்பரிய கலைகளை காப்பாற்றி வருபவர்.

பசும்புலரி ரவீந்திரன் - பசுமை கோவைக்கு பாடுபடுபவர்.

கார்த்தீஸ்வரன் - குழந்தைகளின் மகிழ்வில் இயங்கும் சமூகவியலாளர்.

வருக..
தொடர்பு கொள்ள : 9965689020, 9442816863
வாழ்த்தையும், அன்பையும் வேண்டும்...
குக்கூ & இயல்வாகை

4 July 2012

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"

 


இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வாரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் பேசலாமா...

''எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

  ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.

தினமும் காலையில் கம்பு, தினை மாவு, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து கஞ்சிவைத்துக் குடிக்கிறேன். இந்தக் கஞ்சி விஷம் இல்லாதது. அதாவது, ரசாயனம் இல்லாதது. கரும்புக்கு ரசாயனம் இடுவதால் வெல்லத்தில் ரசாயனம் இருக்கிறது. பனை மரத்தில் ஏறி நம் ஆட்கள் இன்னும் பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதனால்தான் பனை வெல்லம் சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது.

பகல் வேளையில் ரசம் அல்லது மோர் மட்டுமே சேர்த்துக் கொஞ்சமாக சாதம் சாப்பிடுகிறேன். இடையில் காய்கறி ரசம். இரவில் இரண்டு அல்லது மூன்று இட்லி மட்டுமே ஆகாரம். பசிக்காவிட்டால் சாப்பிடுவது இல்லை. இதுதான் என்னுடைய சாப்பாட்டு அட்டவணை.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விடுதிகளில் சாப்பிடுவது இல்லை. அதிகபட்சமாக நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் பழங்கள், கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் மட்டுமே என் உணவு. காபி, டீ சாப்பிடுவதைவிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் டன் அளவு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களையே இன்றைக்கு மக்கள் சாப்பிடுகிறார்கள். நோயோடு பலரும் வாழ்வதற்கு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் ஒரு முக்கியமான காரணம்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் நன்றாக இருக்கும். உடல், மன ஆரோக்கியத்துக்கு இயற்கை ஒரு பெரிய வரப்பிரசாதம். செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும். இதை ஒரு சிகிச்சைமுறையாகக்கூட மருத்துவர்கள் சொல்வார்கள். தாவரங்களிடமும் செல்லப் பிராணிகளிடமும் அன்பு செலுத்திப் பாருங்கள். அதன் மகத்துவம் புரியும்'' என்றவரின் பேச்சு மெள்ள இன்றைய இளைஞர்களின் புகை, மதுப் பழக்கம் நோக்கிச் சென்றது.

''மது, புகை வியாபாரிகள் தங்களது லாபத்துக்காக இளைஞர்கள் மீது இந்தப் பழக்கத்தைத் திணிக்கிறார்கள். வருங்காலத் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்கள், மது - புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரலையும் குடலையும் கெடுத்துச் சீரழிகிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சமூகச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் சிக்கல் என்று எல்லாத் தரப்பிலும் பிரச்னைகள் குவிகின்றன. இதை அனைவரும் சேர்ந்து ஒருமித்துக் கண்டிக்க வேண்டும். 'உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் நாம் செய்யக் கூடாது’ என்ற உறுதியான சுயக் கட்டுப்பாடு ஒன்றே இதுபோன்ற தீய பழக்கங்களின் பிடியில் சிக்காமல் நம் சமூகத்தை காக்கும்.

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்’
- என்கிறார் வள்ளுவர்.

அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அதில் கலக்கும் ரசாயனங்கள் நம் வயிற்றுக்குள் சென்றும் அதே வீரியத்தோடுதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பசித்தால் மட்டுமே உணவு, அதுவும் இயற்கை உணவு; அதையும் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரோடு சேர்த்து ரசித்து மென்று சாப்பிட்டால் எப்படி வரும் வியாதி? எல்லாமே கலைதான்!

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு. நான் நாள் தவறாமல் யோகாசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைச் செய்கிறேன். முதுகெலும்பை நேராக வைத்திருக்கும் வஜ்ராசனமும் செய்வேன். இவைதான் என் ஆரோக்கிய ரகசியம்'' என்று தனது 

வெண்தாடியை நீவியபடி பளிச்செனச் சிரிக்கிறார்
பசுமை நாயகன்!
........இயற்கை ஞானி நம்மாழ்வார்

இடம் :
வானகம்,
பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவு பாதுகாப்பிற்கான 

நம்மாழ்வார் உயிர் சூழல் நிறுவனம்,
கடவூர், கரூர் மாவட்டம்.
கைபேசி : 94880 55546

1 July 2012

மானாவாரி அல்ல, வானாவாரிப் பயிர்கள்!

- சா. ஜெயப்பிரகாஷ்
தினமணி First Published : 01 Jul 2012 02:36:01 PM IST

http://dinamani.com/Images/article/2012/7/1/30kon5.jpg
அன்று - இன்று



                  
                             திருச்சி, மணப்பாறை பொன்னணியாறு அணையைத் தாண்டி சிறிது தொலைவில் 35 ஏக்கர் பரப்பளவில் - கரூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது "வானகம்'. "பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்புக்கான நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம்' என்பது இந்த வானகம் அறக்கட்டளையின் பெயர் விரிவாக்கம்.

 தண்ணீரில்லாத வறட்டுக் காட்டை பயிர் செய்யும் - பயிர் செய்யப் பயிற்சியளிக்கும் இடமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் அவரது சகாக்களும். இதுபோன்ற பயிற்சிகளில் இளைஞர்களைப் பார்க்க முடியுமா? என்ற கேள்வி இயல்பானது. இங்கு இளைஞர்கள் குறிப்பாக சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமே அதிகம் பேசுகிறார் நம்மாழ்வார்.

 உரங்களாலும், கடன்களாலும், குறைந்த அளவு விலை நிர்ணயம் போன்ற தற்போதைய விவசாயச் சிக்கலை, இயற்கை விவசாயம் என்ற நிலைக்கு மாற்ற முடியுமா? என்ற கேள்வியைக் கேட்டு நம்மாழ்வாரைப் பேசவைத்தோம். அவர்

 கூறியதிலிருந்து...

""உண்மைதான். ரசாயன உரங்களால் நிலங்கள் தரிசாகக் கிடக்கும் நிலையில் இயற்கை விவசாயத்தை விட்டால் வேறு கதியில்லை. எல்லோரையுமே நோயாளி ஆக்கிவிட்டார்கள்.

 விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துவிட்டன. தமிழ்நாட்டில் காவல்துறையிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் வட நாட்டில் விவசாயிகள் தற்கொலை என்ற தலைப்புச் செய்தியைக் கூறி வருகிறோம். இங்கும் தற்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வேறு மார்க்கம் இல்லை என்பதுதான் உண்மை.

 இயற்கை வேளாண்மையில் தொடக்கத்தில் விளைச்சல் குறைவாக இருக்கலாம். அதுவும்கூட அவர்களின் அனுபவக் குறைவின் காரணமாகவே இருக்கும். ஆனால், போகப்போக, உழைப்பு குறையும், விளைச்சல் அதிகரிக்கும்.

 அதேபோல, இயற்கை வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு தற்போதைய சந்தையும் சரியாக இல்லை. இயற்கை உணவுகளை உட்கொள்ளும் நுகர்வோர் இயக்கத்தையும் உருவாக்க வேண்டியுள்ளது.

 அப்போது அவர்களுக்கான உரிய விலையையும் பெற்றுத் தர முடியும். விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நேரடித் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார் நம்வாழ்வார்.

 கடந்த 4 ஆண்டுகளில் இங்கு வந்து பயிற்சி எடுத்துச் சென்றவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது.

 ""சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் உப்பாக இருக்கும் நிலையில், வானகத்தில் அருமையான சுவையுடன் குடிநீர் கிடைக்கிறது. இதற்குக் காரணம் மழைக்காலத்தில் வெள்ளமாக அடித்துச் சென்ற நீரை பூமிக்கடியில் செலுத்தியதன் விளைவு'' என்கிறார் ஏங்கெல்ஸ் ராஜா.

 பயிற்சியின்போது இங்கு வழங்கப்படும் உணவு பெரும்பாலும் இங்கேயே உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை விவசாய விளைபொருள்களே. நகர்ப்பகுதி ருசி கண்ட நாக்கு- வழக்கமான அரிசிச் சோறு, பருப்பு சாம்பார், ரசம், மோர் என்றாலும்- இந்த உணவை உண்டதும் துள்ளிக் குதிப்பர்.

 இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்கள், கம்பு, கேழ்வரகு கூழுக்காக அரைத்த மாவு, இங்கேயே விளைவிக்கப்பட்ட சிறுதானியங்களான சாமை, திணை, வரகு, குதிரைவால் போன்றவை விற்பனை செய்யப்

 படுகின்றன.

 வானகத்துக்குள் "பயோ கேஸ்' தயாரிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இங்கு வளர்க்கப்படும் மாடுகளும், ஆடுகளும் விவசாய உற்பத்திக்கான உரங்களைத் தருகின்றன.

 விவசாய உற்பத்தியில் குறிப்பாக நெல் பயிரில், நெற்கதிர்கள் வீட்டுக்கும், வைக்கோல் போன்றவை மாட்டுக்கும், வேர் உள்ளிட்ட அடிக்கட்டை நிலத்துக்கும் (பசுந்தழை உரம்) என்பதே இயற்கையின் படைப்பு என்கின்றனர்.

 வறட்டு பூமியிலும் செடிகளை வைத்துவிட்டு மண்பரப்பின் மேல் வீணாக உள்ள செடிகளை துண்டுகளாக வெட்டிக் குவித்து வைத்துவிட்டால் எத்தனை வெயிலையும் தாங்கி வளரும் என்கிறார்கள். இந்த முறையை "மூடாக்கு' என்று அழைக்கின்றனர்.

 நாமெல்லாம் "மானாவாரி பயிர்கள்' என்று குறிப்பிடுகிறோமல்லவா? உண்மையில் அவை "வானாவாரிப் பயிர்கள்'. பேச்சு வழக்கில் வானத்தை "மானம்' என்று அழைத்து அழைத்து அவை மானாவாரிப் பயிர்களாகிவிட்டன என்கிறார்கள்.

 இதுபோல ஏராளமான எளிய- இயற்கை விவசாய முறைகளைப் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது "வானகம்'.
நன்றி : தினமணி மற்றும் சா. ஜெயப்பிரகாஷ்

15 June 2012

“வானகம்” ( நம்மாழ்வார் ) பண்ணையில் 
நிரந்தர இயற்கை வேளாண்மை பயிற்சி தொடக்கம்
Photo: நம்மாழ்வார் பண்ணையில் நிரந்தர இயற்கை வேளாண்மை பயிற்சி தொடக்கம்

கரூர் மாவட்டம் கடவூரில் உள்ள நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவமான “வானகம்” பண்ணையில் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் நிரந்தர வேளாண்மை - இயற்கை வேளாண்மை குறித்த ஐந்து நாள் பயிற்சி முகாமை  இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் இன்று தொடங்கி வைத்தார். 

தொடக்க விழாவிற்கு நபார்டு வங்கியின் துணை மேலாளர் அ.பார்த்திபன் தலைமை வகித்தார். இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் ஊரகத் தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின் இயக்குநர் க.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். வந்தவர்களை வானகத்தின் அறங்காவலர் ஏங்கல்சு ராசா வரவேற்றார். மேலாளர் பார்த்திபன் இப்பயிற்சியினைப் பெறுகின்ற அனைவரும் நிரந்தர இயற்கை வேளாண்மையை தாங்களும் பின்பற்றி மற்ற வேளாண்குடி மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். நஞ்சில்லா உணவு தமிழ் நாட்டில் மட்டும் இன்றி இந்தியாவிற்கும் வழங்க வேண்டும் என்றார். 

இயக்குநர் சந்திரசேகரன் இது போன்ற பயிற்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க வேண்டும் என்று வாழ்த்தினார். 

பயிற்சியினை தொடங்கி வைத்த நம்மாழ்வார் “ஊதியம் பெறுபவர்களுக்கு ஓய்வு உண்டு, மண்வெட்டி பிடித்து உழைப்பவனுக்கு ஓய்வு என்பதே இல்லை. மண்ணை மலடாக்கி விட்டு விளைச்சல் இல்லை என்று புலம்புகிறோம். எப்படி இந்த மண் மலடானது? நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் 78% நைட்ரஜன் இருக்கிறது.  நைட்ரஜனுக்காக  மண்ணில் போடும் யூரியாவில் 46% தான் உள்ளது. மீதி 54% வெறும் உப்பு தான். யூரியா யூரியா என்று மண்ணில் போட்டு மண்ணை மலடாக்கி விட்டோம். பசுமை புரட்சி பொய்த்து விட்டது என்பதை அனைவரும் இன்று உணர்ந்து உள்ளார்கள். இந்நிலையை மாற்ற முடியுமா? முடியும்.  நமக்காக நைட்ரஜனை காற்றில் இருந்து எடுத்து மண்ணில் வேர் முடிச்சுகள் மூலமாக நிலை நிறுத்த கொளுஞ்சி, உரக்கொன்றை, உளுந்து, சோயா பீன்ஸ், தட்டபயறு, அகத்தி, செம்பை போன்ற தாவரங்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடையாகும்.  நுண்ணுயிரிகளை பெருக்க வேண்டும், அதற்கு மூடாக்கும் கால் நடைகளும் அவசியமாகின்றன.

பூமித் தாய் வளமாக இருந்தால் அதன் பிள்ளைகளான பயிர்களும் செழிப்பாக ஆரோக்கியமாக இருக்கும். அதே போன்று பயிரில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் அது நிலத்தின் குறைபாடு என்று அறிந்து இயற்கை சுழற்சியை உணர்ந்து தாயை சரி செய்ய வேண்டும். இயற்கை அன்னையை பராமரிப்போம் இயற்கை அன்னை நம்மை பராமரிப்பாள்” என்று முழக்கமிட்டார். 

இப்பயிற்சி மாணவர்கள் தாங்கள் முகாமில் கலந்து கொள்ளும் நோக்கத்தை விவரித்தனர். தொடக்க விழாவின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் கணேசன் நன்றியுரையாற்றினார்.


கரூர் மாவட்டம் கடவூரில் உள்ள நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவமான “வானகம்” பண்ணையில் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் நிரந்தர வேளாண்மை - இயற்கை வேளாண்மை குறித்த ஐந்து நாள் பயிற்சி முகாமை இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் இன்று தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவிற்கு நபார்டு வங்கியின் துணை மேலாளர் அ.பார்த்திபன் தலைமை வகித்தார். இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் ஊரகத் தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின் இயக்குநர் க.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். வந்தவர்களை வானகத்தின் அறங்காவலர் ஏங்கல்சு ராசா வரவேற்றார். மேலாளர் பார்த்திபன் இப்பயிற்சியினைப் பெறுகின்ற அனைவரும் நிரந்தர இயற்கை வேளாண்மையை தாங்களும் பின்பற்றி மற்ற வேளாண்குடி மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். நஞ்சில்லா உணவு தமிழ் நாட்டில் மட்டும் இன்றி இந்தியாவிற்கும் வழங்க வேண்டும் என்றார்.

இயக்குநர் சந்திரசேகரன் இது போன்ற பயிற்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

பயிற்சியினை தொடங்கி வைத்த நம்மாழ்வார் “ஊதியம் பெறுபவர்களுக்கு ஓய்வு உண்டு, மண்வெட்டி பிடித்து உழைப்பவனுக்கு ஓய்வு என்பதே இல்லை. மண்ணை மலடாக்கி விட்டு விளைச்சல் இல்லை என்று புலம்புகிறோம். எப்படி இந்த மண் மலடானது? நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் 78% நைட்ரஜன் இருக்கிறது. நைட்ரஜனுக்காக மண்ணில் போடும் யூரியாவில் 46% தான் உள்ளது. மீதி 54% வெறும் உப்பு தான். யூரியா யூரியா என்று மண்ணில் போட்டு மண்ணை மலடாக்கி விட்டோம். பசுமை புரட்சி பொய்த்து விட்டது என்பதை அனைவரும் இன்று உணர்ந்து உள்ளார்கள். இந்நிலையை மாற்ற முடியுமா? முடியும். நமக்காக நைட்ரஜனை காற்றில் இருந்து எடுத்து மண்ணில் வேர் முடிச்சுகள் மூலமாக நிலை நிறுத்த கொளுஞ்சி, உரக்கொன்றை, உளுந்து, சோயா பீன்ஸ், தட்டபயறு, அகத்தி, செம்பை போன்ற தாவரங்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடையாகும். நுண்ணுயிரிகளை பெருக்க வேண்டும், அதற்கு மூடாக்கும் கால் நடைகளும் அவசியமாகின்றன.

பூமித் தாய் வளமாக இருந்தால் அதன் பிள்ளைகளான பயிர்களும் செழிப்பாக ஆரோக்கியமாக இருக்கும். அதே போன்று பயிரில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் அது நிலத்தின் குறைபாடு என்று அறிந்து இயற்கை சுழற்சியை உணர்ந்து தாயை சரி செய்ய வேண்டும். இயற்கை அன்னையை பராமரிப்போம் இயற்கை அன்னை நம்மை பராமரிப்பாள்” என்று முழக்கமிட்டார்.

இப்பயிற்சி மாணவர்கள் தாங்கள் முகாமில் கலந்து கொள்ளும் நோக்கத்தை விவரித்தனர். தொடக்க விழாவின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் கணேசன் நன்றியுரையாற்றினார்.

1 June 2012



இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி



                                     
               
                       கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண்   பண்ணையில் " நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் வருகிற ஜூன் மாதம் 15.6.2012  முதல்  19.6.2012     ஆகிய 5  நாட்களில்   இயற்கை வாழ்வியல் பயிற்சி  நடைபெறுகிறது.
                     இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும்.   செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும்.
இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் "  அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.
  
ஏங்கல்ஸ் ராஜா ந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.5 நாட்களும் தங்கி பயிலுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். 

தங்குமிடம், உணவு   இலவசம்.
முன்பதிவு  அவசியம் . மேலும் விவரங்களுக்கு
   தொலைபேசி எண் : 9787648002 , 9952324855, 9488055546
 

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.

மருந்தே இல்லாத உடல் நலம் 
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.